கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை நெய்தல் கோடை விழாவில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நாய்கள் கண்காட்சி
கடலூர் மாவட்டம், நெய்தல் கோடை விழாவை முன்னிட்டு வெள்ளி கடற்கரையில் நாய் கண்காட்சி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி .பாலசுப்பிரமணியனம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . இந்த கண்காட்சியில் 60 நாய்கள் கலந்து கொண்டன . முதல் பரிசு ரூபாய் 7000 சுழல் கோப்பை மற்றும் சான்றிதழும் இரண்டாம் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் சூழ கோப்பை சான்றிதழ் மூன்றாம் பரிசாக ரூபாய் மூவாயிரம் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக பாண்டிச்சேரி இணை இயக்குனர் டாக்டர் குமரன் நடுவராக இருந்து சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்தார் .இந்த கண்காட்சி மிக சிறப்பாக நடைபெறுவதற்கு கடலூர் வர்த்தக சபையின் தலைவர் கிருஷ்ணாலயா துரைராஜ் ஒத்துழைப்பு நல்கினார் .இந்த கண்காட்சியில் துணை இயக்குனர் உதவி இயக்குனர்கள் கால்நடை உதவி மருத்துவர்கள் கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஊர்தி ஓட்டுனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment