சிதம்பரம் நகராட்சிசார்பில், சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள பெரியண்ணா குளத்தைதுப்புரவு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியை சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே.ஆர். செந் தில்குமார் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன்,துணைத் தலைவர் முத்து, தி.மு.க.நகர மன்றகொரடா ஜேம்ஸ், விஜயராகவன் உள்ளிட்டோர் மேற்பார்வையில், 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு குளத் தின் வடகரை, கீழக்கரை பகுதியை சுத்தம் செய்யும்பணியில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்துதுப்புரவு பணியாளர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச் சாமி, கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகர், மணிகண்டன், தி.மு.க. நகர துணைத்தலை வர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வி.என். ஆர். கிருஷ்ண மூர்த்தி, தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment