கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 237 மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் அம்பேத்கர் மற்றும் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 2 மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment