சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 June 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை கருத்து கேட்பு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக்கு சென்ற நிலையில் தீட்சிதர்களால் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்ய அனுமதிக்காத நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பாக பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு நடராஜர் சபா நாயகர் திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33 ன் படி நிர்வாக ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் Persons having interest as per section 6(15) தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனை வருகின்ற 20.06.22 மற்றும் 21.06.22 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

 

முகவரி துணை ஆணையர் ஒருங்கிணைப்பாளர் விசாரணைக்குழு இணை ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலைத்துறை 18 ஆற்றங்கரை தெரு புதுபாளையம் கடலூர் 607 001 மின்னஞ்சல் Vocud.hrce@tn.gov.in


கீழ்க்கண்ட  முகவரியில் நேரில் அளிக்கலாம் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் 21.06.22 மாலை 3:00 மணிக்குள் அனுப்பலாம் என இந்து இந்து சமய அறநிலைத்துறை சார்பாக அறிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

*/