2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது, சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும் துணிச்சலுடன் நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்து அதற்கான சான்றுகள் மற்றும் புகைப்படங்கள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உறப்பினர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேரு விளையாட்டு அரங்கம் பெரியமேடு சென்னை 600 003 எனும் முகவரிக்கு தபால் மூலம் 26.06.2022க்குள் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது https.//awards.in.govin என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் 30.06 2020க்குள் அனுப்பி வைக்கவேண்டும் மேற்படி விருது பெறுவதற்கான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர தீர செயல் புரிந்த பெண்கள் பயன்பெற வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

No comments:
Post a Comment