கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 June 2022

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


அம்பாள்புரம் ஊராட்சியில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம்           மருத்துவ முகாம் நடைபெற்றது!!



கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் அம்பாள்புரம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் கிருஷ்ணாபுரம்                 வட்டார மருத்துவமனையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையும்  இணைந்து அம்பாள்புரம் கிராம ஊராட்சி நிர்வாகத்துடன்     இணைந்து டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.


முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விசு.வேல்முருகன்    தலைமை தாங்கினார் கிருஷ்ணாபுரம்               வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் விஜயகுமார் டாக்டர் ரஞ்சித்குமார் டாக்டர் சத்யபிரியா டாக்டர் சங்கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக புவனகிரி மேற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் மதியழகன் கிழக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் டாக்டர் மனோகரன் ஆகியோர்  முகாமில் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.


முகாமில் பொது மருத்துவம் மற்றும்  காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் கிருஷ்ணாபுரம்               வட்டார மருத்துவர்களும்          சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும்       இணைந்து  மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள்      அளித்தனர் மேலும் இம்மருத்துவ  முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழகினர்    இந்த முகாமில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

No comments:

Post a Comment

*/