கீரப்பாளையத்தில் பொதுமக்கள் வர்த்தக வியாபாரிகள் கடை அடைத்து சாலை மறியல் போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

கீரப்பாளையத்தில் பொதுமக்கள் வர்த்தக வியாபாரிகள் கடை அடைத்து சாலை மறியல் போராட்டம்


கீரப்பாளையத்தில் பொதுமக்கள் வர்த்தக வியாபாரிகள் கடை அடைத்து சாலை மறியல் போராட்டம்




கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக வியாபாரிகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . புவனகிரி நகரத்தை சேர்ந்த வாடகை வேன்கள் கீரப்பாளையம் ஊராட்சயின் அனுமதி இல்லாமலும் போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தப்படுவதாக கூறி  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வர்த்தக வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு வேன் ஓட்டுநர்களுக்கும் பிரியாணி கடைகாரருக்கும் இடம் பிரச்சனை காரணமாக  கீரப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வேன் ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து கீரப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி இல்லாமல் புவனகிரியை சேர்ந்த வாடகை வேன்கள் நிறுத்தப்படுவதாக ஊராட்சி நிர்வாகம்  குற்றம் சாட்டியது .


இதன் தொடர்ச்சியாக நேற்று  நடைபெற்ற கீரப்பாளையம் பொது மக்கள்  சாலை மறியலில் புவனகிரி வேன்கள் கீரப்பாளையம்  ஊராட்சியில் நிறுத்த கூடாது என கண்டனத்தை தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி  காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் பேசினர் பேச்சுவார்த்தையில் கீரப்பாளையம் பொதுமக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் புவனகிரி சிதம்பரம் சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


மேலும் இதன் காரணமாக கீரப்பாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் இதே போல் மாறி மாறி சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இரு தரப்பு பிரச்சனைக்கும் அதிகாரிகள் தலையிட்டு விரைவில் சுமூக தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

No comments:

Post a Comment

*/