காட்டுமன்னார்கோயில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 June 2022

காட்டுமன்னார்கோயில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வாயிற் கூட்டம்


காட்டுமன்னார்கோயில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது முன்னாள் எம்எல்ஏ முருகுமறான் பங்கேற்பு 


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் போக்குவரத்து பணிமனையில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக, அண்ணா தொழிற்  சங்கம் காட்டுமன்னார்கோயில்  பணிமனை, சிதம்பரம் பணிமனை-I, சிதம்பரம் பணிமனை -II சார்பில் 14வது ஊதிய   ஒப்பந்த விளக்க வாயிற் கூட்டம் காட்டுமன்னார்கோயில்  பணிமனையில் நடை பெற்றது.  தொழிற் சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், இளங்கோ, சுப்பிரமணியன், ராஜேந்திரன், சக்திவேல், ராஜேந்திரன், ராஜ்மோகன், குமராஸ்வாமி, மகேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், 


கடலூர் மண்டல தலைவர்  சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.இக் கூட்டத்திற்கு  கழக அமைப்பு செயலாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி சிறப்புரை ஆற்றினார். 


இவ்விழாவில் காட்டுமன்னார்கோயில் கோயில் பேரூர் கழக செயலாளர் எம்ஜிஆர்தாசன், காட்டுமன்னார்கோயில் கோயில் ஒன்றிய கழக செயலாளர்கள் வாசு. முருகையன், எம்என்  சிவகுமார், தொழிற் சங்க நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, செல்வகுமார், சிற்றசு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பணிமனை  பொருளாளர் ராஜ் நன்றி கூறினார்.


செய்தி கே. பாலமுருகன்


No comments:

Post a Comment

*/