காட்டுமன்னார்கோவிலில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு..!!நடவடிக்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 June 2022

காட்டுமன்னார்கோவிலில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு..!!நடவடிக்கை


அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐயா எல் இளையபெருமாள் பேரவை சார்பில் கோரிக்கை 


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில்  இளையபெருமாள் மக்கள் நலப் பேரவை நிறுவனத் தலைவர் பொட்டு ராமானுஜம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்

மனுவில் அவர் கூறியிருப்பதாவது;- 


காட்டுமன்னார்கோயில் காளியம்மன் கோயில் தெருவில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக எழுந்தருளி அளித்துவரும் காளியம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் பின்புறம் மேற்கொண்ட சர்வே நெம்பர் 248/2 இல்  அரசு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அரசு பட்டி  செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட ஆலயத்திற்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

 

இப்படி பக்தர்கள் கூடும் பொழுது  இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அப்படி  இருக்கும் போது மேற்கொண்ட சர்வே எண்ணில் உள்ள அரசு பட்டி இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சித்து வருகிறார் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது அதை உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி அதில் குளியலறை கழிவறை கட்டிக் கொடுக்க  வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார் இவ்வாறு எல் இளையபெருமாள் பேரவை நிறுவனத் தலைவர் பொட்டு ராமானுஜம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

*/