நல்லூர், நகர், வேப்பூர், கொத்தனூர் பகுதியில் சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதிகளில் தமிழக அரசு உத்திரவின்படி ஜீன் 5- ந் தேதி சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
நகர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் முன்னிலையில் நகர் பெரிய ஏரிக்கரையிலும், ஊராட்சி நடுநிலை பள்ளி வளாகம், மற்றும் கோயில் வளாகத்திலும் 200 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசந்திரன், ஊராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்
இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தனர்.
பா.கொத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனியன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் துணை தலைவர் வசந்தா நாராயணசாமி ஊராட்சி செயலாளர் ஞானவேல் ஒன்றிய கணக்காளர் அருள்நிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தனர்
திருப்பெயர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் ராமசாமி தலைமையில் நல்லூர் பிடிஒ, சிவகுருநாதன், துணை தலைவர் கலைச்செல்வி பரமசிவம் ஊராட்சி செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வேப்பூர் ஊராட்சியில் தலைமை மகேஸ்வரி திருஞானம் தலைமை யில், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலர் வெங்கடேசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
சேப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் தெய்வானை தீனதயாளன், துணை தலைவர் கட்டிமுத்து, ஊராட்சி செயலர் சரவணன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்
இது போல் நல்லூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடபட்டது.
No comments:
Post a Comment