உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது .
மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் மாநகர பொறியாளர் (பொ) மகாதேவன் நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பலவகையான மரக்கன்றுகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கே எஸ் ராஜா கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் சாய்துஷா சலீம், செந்தில்குமாரி, இளந்திரையன், சங்கீதாவசந்த்ராஜ், விஜயலட்சுமி செந்தில், ராஜலட்சுமி சங்கரதாஸ், த.சங்கீதா,சுதாஅரங்கநாதன்,கிரேசி ஆறுமுகம் , சசிகலா ஜெயசீலன், பரணிதரன், சரவணன், அருள்பாபு சக்திவேல் திமுகவைச் சேர்ந்த பாலாஜி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment