சேதுவராயன்குப்பம் ஊராட்சியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மூலிகை சாகுபடி குறித்த பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

சேதுவராயன்குப்பம் ஊராட்சியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மூலிகை சாகுபடி குறித்த பயிற்சி முகாம்.


சேதுவராயன்குப்பம் ஊராட்சியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு மூலிகை சாகுபடி குறித்த  பயிற்சி முகாம்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேதுவராயன்குப்பம் ஊராட்சியில் நல்லூர் வட்டார  வேளாண் துறை சார்பில் உள்மாவட்ட  மூலிகை பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது 


முகாமிற்கு, நல்லூர் ஒன்றிய அட்மா திட்ட மேலாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர்கள் இளையராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்று விவசாயம்  பயிற்றுனர் தெய்வீகராஜ் பயிற்சி அளித்தார். 


நல்லூர் வட்டார  வேளாண் உதவி அலுவலர் ரம்யா, திமுக கிளை செயலாளரும்   அட்மா குழு உறுப்பினருமான  ராஜா, உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமில்  மூலிகை பயிர் சாகுபடி செய்து இரண்டு மடங்கு உற்பத்தியில் மூன்று மடங்கு வருவாய் ஈட்டுவது குறித்தும்,  மூலிகை சந்தைப்படுத்தும் முறை குறித்தும்  சாகுபடி செய்யும் விதம் குறித்தும்  பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள்  விளக்கமளித்தனர்.

No comments:

Post a Comment

*/