கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 5லட்சம் நிவாரண உதவி!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 5லட்சம் நிவாரண உதவி!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று நேற்று உயிரிழந்த  7  நபர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 5லட்சம் நிவாரண தொகையை தமிழக முதல்வர் அறிவித்தார்.  இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்த உடன் தமிழக முதல்வர் அறிவித்த உதவி பெறுவதற்க்காக மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் நிதி உதவியான 5 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உயிரிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினர் நிவாரணத் தொகைப் பெறுவதற்காக வந்த பெற்றோர்கள் அமைச்சர்களிடம் கதறி அழுதனர், அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அதை பார்த்து கூட்டரங்கில் உள்ளவர்களும் கண்கலங்கயதையும் பார்க்க முடிந்தது முன்னதாக 1 நிமிடம் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment

*/