வைத்தீஸ்வரன்கோயில் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய தலைவர்,செயலர் மற்றும் பொருளர் பதவியேற்பு நிகழ்ச்சி 18-06-2022 அன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த முறையில் பணிபரியும் பல்வேறு துறையை சார்ந்த நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் ரிலையன்ஸ் அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம். கால்நடை வளர்ப்பு,மீன் வளம் மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காவும், கொரோன ஊரடங்கு கலத்தில் உணவின்றி தவித்த நபருக்கு உரிய நேரத்தில் மளிகை பொருட்கள் வழங்கியமைக்காவும், முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கியமைக்காவும் மனித நேய மாமணி விருது ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோயில் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் செய்திருந்தது.

No comments:
Post a Comment