கடலூர் மாவட்டத்தில் லேடிஸ் பஸ்ட் ஹலோ சீனியர் ஹெல்ப்லைன் எண்கள் மூலம் அந்தப் புகார்கள் மீது சிறப்பாக தீர்வு காணும் மாவட்ட காவல்துறை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

கடலூர் மாவட்டத்தில் லேடிஸ் பஸ்ட் ஹலோ சீனியர் ஹெல்ப்லைன் எண்கள் மூலம் அந்தப் புகார்கள் மீது சிறப்பாக தீர்வு காணும் மாவட்ட காவல்துறை

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவித்திருந்த லேடிஸ் பஸ்ட் ஹலோ சீனியர் ஹெல்ப்லைன் எண்கள் மூலம் அந்தப் புகார்கள் மீது சிறப்பாக தீர்வு காணும் மாவட்ட காவல்துறை



கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் பெண்களின் நலன் காக்க Ladies First 82200 06082, முதியோர்களின் நலன் காக்க Hello Senior 82200 09557 என்ற புதிய காவல் உதவி எண்கள் அறிமுகபடுத்தப்பட்டு புகார்களுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மங்கலம்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி வயது 45 என்பவர் தனது கணவரை பிரிந்துதனது அம்மா வீட்டில் ஒரு வருடமாக இருந்து வந்ததாகவும் தற்போது தனது அம்மா வீட்டில் இருந்து தன்னை வெளியேபோக சொல்லி தனது அப்பா பிரச்சனை செய்வதாக Ladies Firrst காவல் உதவி எண்ணை தொடர்புகொண்டு உதவி செய்யுமாறு தகவல் தெரிவித்தார். உடனடியாக மங்கலம்பேட்டை தலைமை காவலர் . ரியாஸ்முகமது அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டதில் மனுதாரர் தனது அப்பாவிடம் சொத்து கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை என விசாரணையில் தெரியவந்தது. இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்வு காணும்படி அறிவுரை வழங்கி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.


விருத்தாசலம் மணலூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை வயது 70 என்பவர் Hello Senior காவல் உதவி எண்ணில் தொடர்புகொண்டு எதிர்மனுதாரரான உதயசூரியன் என்பவர் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 1,30,000 பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி வருவதாக புகார் தெரிவித்ததன்பேரில் விருத்தாசலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அய்யனார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் .கிருஷ்ணராஜ் ஆகியோர் விசாரித்ததில் எதிர் மனுதாரரான உதயசூரியன் 15 நாட்களுக்குள் பாதி தொகையை கொடுத்து விடுவதாகவும், மீதி தொகையை மூன்று மாத காலத்திற்குள் கொடுப்பதாகவும் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளார், மனுதாரரும் இதனை ஏற்றுக்கொண்டதால் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/