கடலுக்கு செல்லும் போது அச்சமின்றியும் அதிக மீன்பிடித்து கூடுதல் லாபம் ஈட்டும் சோனாங்குப்பதை சார்நத மீனவர்.
எனது பெயர் சதீஷ், கடலுர் மாட்டத்தில் உள்ள சோனாங்குப்பம் என்ற மீனவ கிராமத்தில் பூர்வீக காலத்திலிருந்து வசித்து வருகின்றேன். எனக்கு 18 வருடம் மீன்பிடிப்பு அனுபவமுள்ளது. எனக்கு தற்போது 36 வயது ஆகின்றன.ஆரம்பத்தில் நான் எனது தந்தை , எனது தம்பியுடன் சிறு படகு Fiber மீன்பிடிப்பு தொழில் செய்து வந்தேன். பிறகு கடந்த 5 வருடமாக நான் புதியதாக Fiber படகு வாங்கி எனது தம்பி மற்றும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து 4 நபர்கள் தினசரி மீன்பிடிப்பு தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றோம். காலையில் 4.30 மணிக்கு மீன்பிடிக்க சென்றால் மாலை 6.30 மணிக்கு கரைக்கு வந்துவிடுவோம். படகு பழுதுபார்த்தல், வலை சரி செய்தல்,டீசல் நிரப்புவது போன்ற பணிகளை மாலை நேரத்தில் செய்துவிடுவோம். காலையில் சென்று மாலையில் கரைக்கு வந்துவிடுவதால் உட்கொள்ள உணவு எடுத்து செல்வோம் கடலில் சமைத்து சாப்பிடுவதில்லை.
எங்கள் பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சோனாங்குப்பம் மீனவ கிராமத்தில் மொத்தம் 200 சிறுபடகு வைத்து 450க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பு தொழில் செய்து வருகின்றோம். நாங்கள் தூண்டில் மீன்பிடிப்பு தொழில் செய்து வருகின்றோம்.
2 வருடத்திற்கு முன்பு வரைக்கும் கடலுக்கு செல்லும் போது கடல் காலநிலை குறித்த முன்னறிவிப்பு இல்லாததால் கடலுக்கு செல்லும் போது காற்று மற்றும் அலையின் சீற்றத்தில் சிக்கி வலைகள் கிழிந்துவிடும், படகு அலையில் அடிப்பட்டு சேதம் ஏற்படும். கடலில் இருக்கும் எங்களுக்கு அச்சம் ஏற்படும் கரைக்கு வருவதற்குள் சிரமபட்டுவிடுவோம். கரைக்கு வந்து வலை மற்றும் படகு பழுது நீக்க குறைந்தது 10000 முதல் 15000 செலவாகும். மீன்பிடிக்க செல்லும் போது முதல்நாள் எங்கள் பகுதி மீனவர்கள் எந்த பகுதிக்கு சென்று மீன்பிடித்தார்கள் என்று கேட்டு அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்வோம். அவ்வாறு செல்லும் போது நாள் ஒன்றிக்கு 9000 டீசல்,ஐஸ் மற்றும் உணவு 1000 ரூபாய் வீதம் மொத்தம் 10000 ரூபாய் செலவாகும். மீன் கிடைக்கும் இடத்தை தேடி செல்வதால் டீசல் அதிகமாக செலவாகின்றது. அதிக நேரம் தேடி சென்று மீன்பிடித்து வந்தோம்.
இந்த நிலையில் தான் எனது நண்பர் ரிலையன்ஸ் அறக்கட்டளை பற்றி கூறினார்கள். அவர் கடலுக்கு செல்லும் போது கடல் காலநிலையை அறிந்து செல்வதாகவும் பாதுகாப்பாக மீன்பிடித்து வருவதாக கூறினார். அவரிடம் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி எண் 18004198800 பெற்று கடல் காலநிலை குறித்த தகவல்களை கேட்டு அறிந்தேன். 2021 ஆண்டு முதல் தற்போது வரைக்கும் எனக்கு தினசரி காற்றின் வேகம், திசை,அலையின் உயரம் போன்ற தகவல்கள் voice sms கிடைக்கின்றன. இந்த தகவல்கள் கேட்டு கடலுக்கு செல்ல முடிவு எடுகின்றேன். முன்கூட்டியே கடல் காற்று,அலை பற்றிய தகவல் தெரிவதால் தற்போது பாதுகாப்பான முறையில் அச்சமின்றி கடலுக்கு செல்கின்றோம். குறிப்பாக 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கடல் சீற்றம் மற்றும் புயல் உருவாகிய போது முன்கூட்டியே தகவல் கொடுத்ததால் கடலுக்கு செல்லவில்லை. இந்த தகவல் கிடைக்காமல் சென்றிருந்தால் படகு மற்றும் வலை பாதிக்கப்பட்டிருக்கும், தேவையற்ற செலவு செய்து மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பி வந்திருப்போம்.
இந்த வருடம் 2022 March மாதம் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் பற்றி தகவல் ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த தகவல் ஜிபிஎஸ் பாயின்ட் கொடுத்தார்கள். அந்த பாயின்ட் எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் இருந்தது. அந்த பகுதிக்கு 1 ½ மணி நேரத்தில் சென்றுவிட்டோம். அந்த பகுதியில் தூண்டில் அமைத்த போது 3 மணி நேரத்தில் 350 கிலோ கேரை மீன். வரிசூரை 250 கிலோ கிடைத்தது. ஒவ்வொரு மீன்களும் 1 ½ கிலோ குறையாமல் இருந்தது. மூன்று மணி நேரத்தில் சுமார் 500 கிலோ அளவுக்கு மீன்கள் கிடைத்தது. கேரை மீன் 350x100=35000, வரிசூரை 250x60=15000 மொத்தம் 50000 ரூபாய் மீன் கிடைத்தது. டீசல் 7000,ஐஸ் 500, உணவு -1000 இதில் 8500 செலவானது. 41500 மூன்று பாகமாக பிரித்து ஒரு பாகம் படகு மற்றும் வலை உரிமையாளர் 2 பாகம் 4 மீனவர்கள் பிரித்து எடுத்து கொண்டோம். வழக்கமாக நாங்கள் மீன்பிடிக்கும் போது 25000 முதல் 30000 வரைக்கும் கிடைக்கும். சில நேரத்தில் 10000 கூட மீன்கள் கிடைக்காமல் திரும்பி வந்திருகின்றோம்.
ஆனால் ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கிய தகவல் மூலமாக சரியான இடத்திற்கு மீன்பிடிக்க செல்வதால் டீசல் ஒரு முறைக்கு 1500 முதல் 2000 வரைக்கும் குறைகின்றன. கூடுதல் மீன்கள் கிடைக்கின்றன. மீன்பிடித்த தொழில் ஆபத்தானது எங்களை போன்ற மீனவர்களின் உயிர் மற்றும் படகு வலைகளை பாதுகாக்கவும் உதவியாக இருக்கும். கடல் காலநிலை குறித்த தகவல்களை வழங்கும் இன்காயிஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு நன்றி.
No comments:
Post a Comment