சிதம்பரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

சிதம்பரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டு

சிதம்பரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கி ழமை மீண்டும் இயக்கப்பட்டது.


சிதம்பரம் நகரில் 17-ஆவது வார்டு, மேல வீதியிலுள்ள மேல் நிலை குடிநீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் சங்கு இயந்திரம் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் நேரத்தை அறிய இந்த இயந்திரம் பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பழுது காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சங்கு இயந்திரம் இயக்கப்படவில்லை.


இதுதொடர்பாக நகர்மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, வெள் ளிக்கிழமை காலை 9 மணியளவில் சங்கு இயந்திரத்தை நகர்மன் றத் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் மீண்டும் இயக்கி வைத்தார் . தினமும் காலை 9 மணி, பகல் ஒரு மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் 'சங்கு' ஒலிக்கும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சி.மணிகண்டன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், தில்லை ஆர்.மக்கீன், , அப்புசந்திரசேகரன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/