விருத்தாசலம் காவல் நிலையத்தில் பா. ஜ. க.மாநில தலைவர் அண்ணாமலை மீது இந்திய குடியரசு கட்சியின் சார்பில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.
கடந்த 30.5.2022 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எட்டு ஆண்டுகால சாதனை குறித்து பெருமையாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ஒட்டுமொத்த பட்டியலின மக்கள் இழிவுபடுத்தும் வகையில் நம்பிக்கையற்ற நிலையில் இருந்து நம்பிக்கையும் இருளிலிருந்து ஒளியும் பறையரிலிருந்து விஷ்வகுரு, என்னும் பொருளில் பதம் தீண்டத்தகாத பறையனை விட விஸ்வகர்மா என்ற உயர்ந்த சாதி அளவிற்கு பாஜக வளர்ந்து உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். என்றும் பிஜேபி ஆட்சியில் 8 ஆண்டு கால மோடி ஆட்சியை புகழ்வதற்காக ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது எனவும் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய குடியரசு கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை தலைமையில் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment