கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி - 630 மில்லி கிராம் தங்கத்தில் கருணாநிதி உருவம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி - 630 மில்லி கிராம் தங்கத்தில் கருணாநிதி உருவம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் பொற்கொல்லர் முத்துக்குமரன் வயது 41 இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி மொத்தம் 729 மில்லி தங்கத்தில் மூன்று சென்டிமீட்டர் உயரம் மூன்று சென்டிமீட்டர் அகலம் அளவில் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்துள்ளார் .


இதில் 630 மில்லி தங்கத்தில் கருணாநிதியின் உருவத்தையும்  99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற கருப்பு சிவப்பு எழுத்தில் பெயரையும் செய்துள்ளார் 


மேலும் பொற்கொல்லர் முத்துக்குமரன் ஏற்கனவே குறைந்த அளவு  தங்கத்தில் இந்திய பாராளுமன்றம் தமிழக சட்டசபை நடராஜர் கோவில் தாஜ்மஹால் உள்பட பலவற்றை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*/