விருத்தாச்சலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரன்னவ நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ பிரதீஸ்வரர் திருக்கோவிலில் சிவாச்சாரியார்கள் தமிழில் மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேட்டைக்குடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரன்னவ நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ பிரதீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக புனித நீர் கலசங்களை யாகசாலையில் வைத்து யாகங்கள் வளர்க்கப்பட்டு,சிறப்பு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் தமிழில் மந்திரங்கள் படிக்க மேளதாலங்களுடன் மங்கள இசை முழங்க கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment