விருத்தாசலத்தில், மத்திய மீன்வள,பால்வள மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜகவினர் மேளதாளத்துடன் வரவேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 June 2022

விருத்தாசலத்தில், மத்திய மீன்வள,பால்வள மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜகவினர் மேளதாளத்துடன் வரவேற்பு.


விருத்தாசலத்தில், மத்திய மீன்வள,பால்வள மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜகவினர் மேளதாளத்துடன்  வரவேற்பு. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வழியாக சிதம்பரம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு விருத்தாச்சலம் பொன்னேரி நெடுஞ்சாலையில்  பாஜகவினர் மேளதாளத்துடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்., மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, புகைப்படம் மற்றும் அமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது, பாஜக அமைப்புசாரா பிரிவு மாநில செயலாளர் பாபு என்பவர் அமைச்சர் எல்.முருகனுக்கு காவி உடை அணிந்த அய்யன் திருவள்ளுவர் உருவ படத்தை நினைவு பரிசாக வழங்கினார். 


கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அதன் பிறகு ,சிதம்பரம் புறப்பட்டுச் சென்றார். இதில் நகர தலைவர் மணியழகன், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் பரமசிவம் வடக்கு ஒன்றிய தலைவர் தங்க வெங்கடேசன் தெற்கு ஒன்றிய தலைவர் வேட்டக்குடி எழிலரசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாபு மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஜெய்கணேஷ் சமூக ஊடக பிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/