காட்டுமன்னார்கோவில் அருகே சாக்கடை கால்வாயில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அரை மா கொளக்குடி ஊராட்சி ஜாகிர் உசேன் நகர் சேர்ந்த ஷேக் என்பவரது பசுமாடு நேற்று மேய்ச்சலுக்கு சென்றபோது தவறி அதே பகுதியில் உள்ள பாசன சாக்கடை வாய்க்கால் உள்ளே விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டது.
இதனையடுத்து உடனடியாக காட்டுமன்னார்கோயில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேற்றில் இறங்கி பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்
செய்தியாளர் கே.பாலமுருகன்

No comments:
Post a Comment