கடலூர் மாவட்டம் விருத்தாசலம பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு முன்பு சொந்தமான இடங்களில் உள்ள மளிகை கடை, வளையல் கடை உள்ளிட்ட கடைகள் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாலும், தேர் பாதுகாப்பு கருதியும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பணி நடைபெற்றது.
அப்போது மின்சாரத்தை நிறுத்தாமல் மின்சாரம் இருக்கும்போதே கடையின் உரிமையாளர்கள் கடையை அகற்றம் போது செயல் அலுவலருக்கும் மின்சார ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் செயல் அலுவலர் மாலா, சரண்யா, பழனியம்மாள், ஆய்வாளர்கள் புகழேந்தி, கோவிந்தசாமி மற்றும் மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதில் விருத்தாசலம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment