சின்னபரூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைமுருகன், பாஜக தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ராஜா கோரிக்கை.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னபரூர் கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னபரூர் கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு உள்ள அரசு ஆரம்ப பள்ளி கட்டிடம் 50 ஆண்டு மேலான பழமையான கட்டிடம். இப்பள்ளியில் 1 வகுப்பு முதல் ஐந்தாம் வ ரை 50க்கும் ஆண் பெண் என மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்படுகிறது.
பள்ளியில் பெண்கள் கழிவறை முற்றிலும் இடிந்து விழுந்ததால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஒரே கழிவறையான ஆண்கள் கழிவறையை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு புதிய கட்டிமேலும் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் , சமூக நலக்கூடமும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
இதுநாள் வரை எந்தவித நடவடிக்கை இல்லை என்பதால் சின்னப்பரூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைமுருகன் கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய பிரிவு மகாராஷ்டிரா மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா உடையாரிடம் கோரிக்கை வைத்தார்.

No comments:
Post a Comment