கடலூர் காவல்துறை சார்பில் நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

கடலூர் காவல்துறை சார்பில் நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு!!

பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிப்பதால் இறந்துவிடுகின்றனர்.


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சக்தி கணேசன் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் அதிகாரிகள், நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தடுக்க அந்தந்த காவல் நிலைய காவல் அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட நீர்நிலைகளை கண்காணித்து, 

உர்ரரபொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்தால் ஆபத்து என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும், ஓடும் ஆற்றுநீரில் குளிக்க கூடாது எனவும், ஆற்றங்கரையோரம் செல்பி எடுக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, நீர்நிலைகளில் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 


நேற்று மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர்  விஜயகுமார் மற்றும் போலீசார் காட்டுப்பரூர் கிராமத்தில் ஏரிக்கு போகும் வழியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு கருதி நீர்நிலைகளில் இறங்ககூடாது என பாதுகாப்பு விழிப்புணர்வு பலகை காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டது. பிறகு காட்டுப்பரூர் கிராமத்தில் ஆதிகேசவ பெருமாள்கோவில் முன்புற வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. வெங்கடேசன் மற்றும் ஊர்பொதுமக்கள், சிறுவர், சிறுமியர்களை அழைத்து ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகிய இடங்களில் ஆழமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது அதில்யாரும், இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்க செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

No comments:

Post a Comment

*/