வானமாதேவி யிலிருந்து பரிச மங்கலம் செல்லும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
கடந்த 20 ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக கிடக்கும் வானமாதேவி பஸ் நிறுத்தத்திலிருந்து பரிச மங்கலம் செல்லும் சாலையை சீரமைக்கக்கோரியும், மழைக்காலம் வந்தால் சேரும் சகதியுமாகவும், வெயில் காலம் வந்தால் காற்றோடு புழுதியும் சேர்ந்து பறக்கும் சாலையாக அவல நிலையில் இந்த சாலை உள்ளது.
இந்த சாலையில் தினந் தினம் விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.உடனடியாக சாலையை சீர் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் வானமாதேவி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது.
கோரிக்கையை ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.தணிகாசலம் தலைமை தாங்கினார். எம்.சந்திரன், ஏ.பிச்சைக்காரன் எல்.பாக்கியராஜ், என்.விஜி, கே. சுதாகர், எஸ். சுரேஷ், சங்கர் குரு, சீசுபிள்ளை, புண்ணிய மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ஜி. மாதவன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மற்றும் கடலூர் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

No comments:
Post a Comment