கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் பாமகவின் கடலூர் தெற்கு மாவட்ட புவனகிரி மத்திய ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புவனகிரி மத்திய ஒன்றிய செயலாளர் தலைக்குளம் சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சாமிசுந்தர் வரவேற்றார். மகளிரணி முத்துலட்சுமி,நிர்வாகிகள் சிவக்குமார், ஐயப்பன், ராம்குமார், ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் , மாநில செயற்குழு உறுப்பினர் கி.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் கிளை தோறும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அரசு நிர்வாகம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வில்லை என்றால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் , வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திட கடுமையான உழைத்திட வேண்டும் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வராக முடிசூட ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பிரவின்குமார், பிரிதிவிராஜன், சிவக்குமார், கலைவாணி உள்ளிட்ட பாமக வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சிவநேசன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment