புவனகிரி அருகே விவசாயக் கூலித் தொழிலாளியின் கூரை வீடு மின் கசிவின் காரணமாக முற்றிலும் எரிந்து சேதம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

புவனகிரி அருகே விவசாயக் கூலித் தொழிலாளியின் கூரை வீடு மின் கசிவின் காரணமாக முற்றிலும் எரிந்து சேதம்!!!

புவனகிரி அருகே சாத்தப்பாடி இந்திரா நகரில் விவசாயக் கூலித் தொழிலாளியின் கூரை வீடு மின் கசிவின் காரணமாக முற்றிலும் எரிந்து சேதம் ஏற்பட்டது !!!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் சாத்தப்பாடி கிராமம் இந்திரா நகரில் வசித்து வரும் விவசாயக் கூலித் தொழிலாளியான விமல்ராஜ் என்பவரின் கூரை வீடு இன்று 03.06.2022 அதிகாலை 7.00 மணி அளவில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ மளமளவென எரிய ஆரம்பித்தது, இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தீயை தண்ணீர் விட்டு அணைத்தனர்.


இச்சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை வீடு முழுவதும் எரிந்த நிலையில் வீட்டில் உள்ள பீரோ. கட்டில் கிரைண்டர் மிக்ஸி. அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் 20 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வீட்டின் ஆவணங்கள் முழுவதும் எரிந்த நிலையில் காணப்பட்டன. 


இது குறித்து சமூக ஆர்வலர் குருமூர்த்தி என்பவர் சாத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த சாத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர் நேரு தாஸ் புவனகிரி வருவாய் ஆய்வாளர் கவிதா உதவியாளர்கள் ஆனந்தன், தீபா ஆகியோர் தீயினால் பாதிக்கப்பட்ட கூரை வீட்டை பார்வையிட்டு சேதம் ஏற்பட்ட பொருள்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். 

பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கூலித் தொழிலாளியான விமல்ராஜ் என்பவருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசு வழங்கி வரும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அரிசி மற்றும் போர்வை போன்ற பொருட்களை வழங்கினர்.

No comments:

Post a Comment

*/