கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா - வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா - வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம், புவனகிரியில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புவனகிரியில் உள்ள வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு புவனகிரி கிழக்கு ஒன்றிய  செயலாளர் டாக்டர் மனோகர் தலைமை தாங்கினார். புவனகிரி நகர துணை செயலாளரும் 10-வது வார்டு கவுன்சிலருமான  சண்முகம் முன்னிலை வகித்தார். புவனகிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கி. சரவணன், புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவரும் நகர செயலாளருமான கந்தன் ஆகியோர் ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம்  வழங்கும் நிகழ்வு துவக்கி வைத்தனர். 


இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில்  திமுக நிர்வாகிகள் நெடுமாறன், மில்  செல்வராஜ், எழில்வேந்தன் ,கண்ணன், சரவணன், தம்பா, தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர் அண்ணதான  நிகழ்ச்சி ஏற்பாட்டினை 10-வது வார்டு செயலாளர் கமால் பாஷா செய்திருந்தார்.

No comments:

Post a Comment

*/