மருதூர் கிராமத்தில் மு. கருணாநிதி 99.வது பிறந்த நாளையொட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

மருதூர் கிராமத்தில் மு. கருணாநிதி 99.வது பிறந்த நாளையொட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை!!!

மருதூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் 99.வது பிறந்த நாளையொட்டி அவரது   திருவுருவ படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்!!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 99.வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாரத ஜோதி  மருதூர் ஏ.இராமலிங்கம்  அவர்களின் தலைமையில் திமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்  ஊராட்சி மன்றதுணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் வரவேற்புரையாற்றினார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர்கள் ஜி. மனோகரன் ஆ. அன்பழகன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மாரியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்       எஸ் .விமல் (எ) பிரபாகரன்  எஸ். கணேசமூர்த்தி மற்றும் கிளை கழக நிர்வாகிகள்  அ.வேல்முருகன் எஸ். ராமையன் மற்றும் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர்  கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் முதல்வர்மு கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி  இனிப்பு    அன்னதானம் மற்றும் நலத்திட்டம் உதவிகள்  வழங்கி   சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment

*/