பாமக நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

பாமக நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

பாமக நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது 

கடலூர் தெற்கு மாவட்ட பாமக  நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆய்வு கூட்டம் புவனகிரி தனியார்  திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ்  தலைமை தாங்கினார்.  கூட்டத்திற்கு  சிறப்பு அழைப்பாளர்களாக  மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி , தலைமை நிலைய செயலாளர் இசக்கி அண்ணாச்சி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பேராசிரியர் செல்வகுமார், மாநில பசுமை தாயக இணை செயலாளர் இராதாகிருஷ்ணன், தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு   நிர்வாகிகளுக்கு நல்ல பல ஆலோசனைளை வழங்கினர். 

மேலும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசை தமிழக முதல்வராக அரியணை ஏற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த கூட்டத்தில் புவனகிரி நகர செயலாளர் கோபிநாத், மாநில நிர்வாகி வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் வாசுதேவன்,ஜெகன் செட்டியார்,அமுதா, இளையராஜா,செல்வபிரதீஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்மோகன்,சங்கர்,அரிபுத்திரன்,

சரண்ராஜ், கலைச்செல்வன், நிர்வாகிகள் ஜெயசீலன், விஷ்ணு, விஜயக்குமார், ஜீவா  ரகுபதி உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் தேவதாஸ் படையண்டவர் நன்றி  கூறினார்.

No comments:

Post a Comment

*/