கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்த பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் தலைமை தாங்கினார்.
பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பேரூராட்சி ஊழியர்கள் சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர் பேரணியானது பேரூராட்சியில் தொடங்கி பேரூந்து நிலையம் பட்டுக்கடை வீதி வழியாக வந்து மீண்டும் பேரூராட்சியில் நிறைவுற்றது.
மேலும் இந்த பேரணியில் மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. பேரணியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் லலிதாமணி முல்லைமாறன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment