வேப்பூர் அடுத்த அரியநாச்சி கைகாட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி போலிசார் விசாரணை.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கைகாட்டி அருகே ஜீன் 14 ந் தேதி செவ்வாய்க்கிழமை இன்று காலை 8 - 30 மணியளவில் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த. மாரிமுத்து மனைவி 80 வயது மூதாட்டியான அலமேலு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண், 38 ல், அரியநாச்சி கைகாட்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் சம்பவ இடத்திலேயே அலமேலு இறந்துவிட்டார்.
இறந்த அலமேலு உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வேப்பூர் போலிசார் அலமேலு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment