கடலூரிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலையில் குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகள் வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வாங்கி வருவதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் கோபமடைந்த அமைச்சர், செய்தியாளரிடம் நீ உரம் வாங்கினாயா என்று கேட்டார். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்த புகார் தெரிவிக்கப்பட்டது என்று நிருபர் கூறியதற்கு, எந்த விவசாயி சொன்னான் நீ சொல்லுயா என்று ஒருமையில் கூறி விட்டு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
No comments:
Post a Comment