நெற்பயிரில் நோயை கட்டுப்படுத்தினேன் நஷ்டத்தை தவிர்த்தேன், மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்த விவசாயி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 June 2022

நெற்பயிரில் நோயை கட்டுப்படுத்தினேன் நஷ்டத்தை தவிர்த்தேன், மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்த விவசாயி.


நெற்பயிரில் நோயை கட்டுப்படுத்தினேன் நஷ்டத்தை தவிர்த்தேன், மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்த விவசாயி.                 

 இது குறித்து அவர் கூறுகையில்                                 

எனது பெயர் L.பாரி தந்தையின் பெயர் M.இலக்குவன், நான் பூர்வீக காலத்திலிருந்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா, வீரனந்தபுரம்  வருவாய் கிராமத்தில் வசித்து வருகிறேன் . எனக்கு தற்போது 66 வயதாகிறது. நான் பட்ட படிப்பு   முடித்து இருந்தாலும் எனக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு அதிகமாக இருந்ததால் கடந்த 40 வருடமாக என்னிடம் உள்ள  12 - ஏக்கர் விவசாய நிலத்தில்  கடலை ,நெல் , உளுந்து மற்றும் பயிறு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன் . அதுமட்டுமல்லாமல் கால்நடைகளை வளர்த்து வருகிறேன் எனக்கு விவசாயம் மட்டும் தான் வாழ்வாதாரம்.

கடந்த 10 - வருடங்களுக்கு முன் நெல் மற்றும் கடலை  போன்ற பயிர் வகைகள் சாகுபடி செய்யும் போது பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும் போது என்ன பூச்சி தாக்கியுள்ளது என்று தெரியாமல் மருந்து கடையில் அவர்கள் கொடுக்கும் மருந்தினை இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தினேன். இருப்பினும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமலும் ,நெற்பயிரில்  குறைந்த மகசூல் மட்டுமே பெற்றும் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2013 ஆண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலமாக எங்கள் கிராமத்திற்கு வந்து அறக்கட்டளையின் செயல்பாடுகள் , குறுஞ்செய்தி சேவைத்திட்டம்  மற்றும் கட்டணமில்லா உதவி எண் 18004198800 பற்றி விளக்கினார்கள். வானிலை சார்ந்த வேளாண்மை ஆலோசனை குறுஞ்செய்தியாக பெற எனது தொலைபேசிக்கு பதிவு செய்த ஒரு வாரத்தில் வானிலை சார்ந்த வேளாண்மை தகவல்கள் கிடைத்தது. தற்போது வரை இந்த தகவல்கள் கிடைத்து வருகின்றன. அவ்வப்போது பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும் போது தொலைப்பேசியில் Whatsapp மூலமாக புகைப்படம் எடுத்து அனுப்பினால் வல்லுநர்கள் மூலமாக உடனடியாக ஆலோசனை வழங்கப்படும்.

 கடந்த 2021 நவம்பர் மாதம்  CR 1009 என்ற ரகம் 9 ஏக்கர் நிலத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை வழிகாட்டுதல் படி, கட்டணமில்லா உதவி எண் 18004198800 மற்றும் தொலைபேசி வழிநேரடி நிகழ்ச்சி மூலம்  நடவு முறைகளை மேற்கொண்டு, உரம் மேலாண்மை முறையாக கடைப்பிடித்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி நல்ல விளைச்சல் காணப்பட்டது. அறுவடை செய்ய 30 முதல் 45 நாட்கள் அதாவது நடவு செய்த 110 நாட்களில்  நெற்பயிரின்  நெற்பழ நோய் தாக்கம்   காணப்பட்டது . நெற்பழ நோய் என்பது பூஞ்சானம் நோய் என்று தெரியமால் மகசூல் நன்றாக இருந்தால் இவ்வாறு வரும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் நெற்மணிகள் மஞ்சள் நிறத்தில் பூஞ்சை போன்று காணப்பட்டது. இது தொடரந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் திரு. மெய்கண்டன் அவர்களை தொடர்பு கொண்டு இந்த நோய்  தாக்கம் குறித்து கூறினேன். இதை கட்டுப்படுத்த ஆலோசனை வேண்டும் என்று  கூறிய போது அவர்கள் கடந்த 25 -11 -2021 தேதி அன்று தொலைபேசி வழி நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் 40 மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் Dr.பாபு, அண்ணாமலை பல்கலை கழக வேளாண்மை பேராசிரியர்  அவர்கள் வல்லுநராக கலந்து கொண்டு நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல், உரம் மேலாண்மை, களைக்கட்டுப்பாடு மற்றும் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சி நெற்பயிரில் நெற்பழ நோயை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று அவரிடம் கேட்டேன் .அதற்கு  நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த, வயல் வரப்புகளை களைகள் இன்றி சுத்தமாகவும் , பயிர்களைத் தொடர் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும். நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடி இலைப் பருவம்  பால் பிடிக்கும் தருணங்களில் இருமுறை காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் வீதம் அல்லது புரபிகோனசால் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி வீதம் அல்லது ஹெக்சாகோனசால் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு ஒரு  மில்லி வீதம் 4மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்று தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று  கூறினார்.

நான் புரபிகோனசால் என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி வீதம் கலந்து தெளித்தேன். இவ்வாறு தெளித்த  5 முதல் 10 நாட்களில் நல்ல மாற்றம் காணப்பட்டது. நெற்மணியில் நிறமாற்றம் காணப்பட்டது. பூஞ்சான நிறமாற்றம் மாறி நெற்மணிகள் நன்றாக காணப்பட்டது.அது மற்ற நெற்மணிக்கு பரவவும் இல்லை. உரிய நேரத்தில் சரியான முறையில் எனக்கு நெற்பழ நோயை கட்டுபடுத்த ஆலோசனை வழங்கவில்லையென்றால்  நெற்மணிகள் நிறமாற்றம் ஏற்பட்டிருக்கும், நெற்மணிகள் நிறமாற்றம் இருந்தால் வியாபாரிகள் நெல் எடுக்கமாட்டார்கள், நெல் எடுத்தாலும் குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.உரிய நேரத்தில் வழங்கிய ஆலோசனையால் பெரிய நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

கடந்த 2022  ஜனவரி  மாதம் அறுவடை செய்தேன். ஏக்கருக்கு 35 மூட்டை வீதம் 7 ஏக்கர் நிலத்தில் 245 மூட்டை ( மூட்டை 60 கிலோ )  மகசூல் கிடைத்தது. அறுவடை செய்த நெல் அரசு கொள்முதல்  சந்தையில் விற்பனை செய்தேன். கிலோ நெல் 21 ருபாய் வீதம் 245x60= 14700 கிலாே 14700x21=308700  விற்பனை செய்தேன். ஏக்கருக்கு 20000 வரைக்கு செலவு ஏற்படும். உரிய நேரத்தில் ஆலோசனை கிடைக்கவில்லையென்றால் இந்த நெல் மூட்டை விற்பனையும் செய்ய முடியாது. அவ்வாறு விற்பனை செய்தாலும் மூட்டை 200 ருபாய் விலை குறைத்து எடுத்திருபார்கள், விவசாயிகளுக்கு விவசாயத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது உரிய நேரத்தில் ஆலோசனை வழங்கி எங்களை போன்ற விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு நன்றி​.

No comments:

Post a Comment

*/