புவனகிரி அடுத்த பு.கொளக்குடி கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 June 2022

புவனகிரி அடுத்த பு.கொளக்குடி கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

புவனகிரி அடுத்த பு.கொளக்குடி கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது!!


கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் பு.கொளக்குடி கிராமத்தில் 900 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில்      விவசாயிகளின் கோரிக்கையை  ஏற்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர்     எம் .ஆர் .கே.  பன்னீர்செல்வம்     அவர்களின் ஆணைக்கு இணங்க தமிழக முதல்வரின் விவசாயிகளை பாதுகாக்கின்ற        வகையில் ஒரு அற்புத திட்டமாக  விளங்கும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைப்பெற்றது.  இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் மனோகரன் கலந்து கொண்டு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.


புவனகிரி நகரக் கழகச் செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான த.கந்தன் புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கிளைக் கழக செயலாளர்கள் ஜெகவீரபாண்டியன்    முருகன் சசிகுமார் செல்வகுமார் ஆகியோர் வரவேற்றனர்மேலும் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர கணேசன் நேரடி நெல் கொள்முதல் நிலைய பருவகால பட்டியல் எழுத்தர் ஸ்டீபன்ராஜ் விவசாய அணி செயலாளர் எஸ் .ஆர். ராஜேந்திரன் எல்லை சிவக்குமார் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் விவசாய பெருமக்கள் கிராம பொதுமக்கள் என பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை ஆர்வமுடன்  கண்டுகளித்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/