மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்திய சீராளன் கல்வி அறக்கட்டளை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்திய சீராளன் கல்வி அறக்கட்டளை

 

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாமில் பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் நோய் மருத்துவம், உள்ளிட்டவைகளுக்கு 20 மேற்பட்ட மருத்துவர்களை கொண்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் சிறப்பு அழைப்பாளராக திமுக கிழக்கு  ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் பங்கேற்று   குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோதிமணி சீராளன் நிகழ்விற்கு தலைமை வகித்தார் சாத்தப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர்  குமரவேல் ஊராட்சி மன்ற துணை தலைவர்  நடராஜன்  விழாவிற்கு முன்னிலை வகித்தனர் .


முகாமில் பொது மருத்துவர்கள் இந்துமதி ,சாமுவேல், பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கீர்த்திதீபக் ,லோகநந்தன் ,எலும்பு முறிவு மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ருசித்தாராவ், கண் மருத்துவர்கள் ஹரிஷ்குமார் ,உதயா ,பத்மபிரியா உள்ளிட்ட மருத்துவர்களால் சுற்றுவட்டார ஏழை எளிய கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது இந்த முகாமில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு முகாமில் பயனடைந்தார்கள்.

No comments:

Post a Comment

*/