வேப்பூர் அருகே என், நாரையூர் கிணற்றில் 11 ஆம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

வேப்பூர் அருகே என், நாரையூர் கிணற்றில் 11 ஆம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை


வேப்பூர் அருகே என், நாரையூர்  கிணற்றில் 11 ஆம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு  போலீசார் விசாரணை


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  மருதமுத்து மகன் ராஜவேல் (வயது16) இவர் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார்.


இவர் இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை, இதனால் அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில்  தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை


இந்த நிலையில் நேற்று காலை 6.30மணியளவில் மருதமுத்து வீட்டிற்கு அருகில் இருந்த 30 அடி ஆழ  கிணற்றில் ராஜவேல்‌ சடலமாக மிதந்து கிடந்துள்ளார்.


இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் இதுகுறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

அதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் ராஜவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மேலும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/