தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள் என்று பாஜக பட்டியல் அணி புகார்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 June 2022

தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள் என்று பாஜக பட்டியல் அணி புகார்..

தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள் என்று பாஜக பட்டியல் அணி புகார் தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனையை விளக்கும் வகையில் தமிழக பாஜகவின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா து.பெரியசாமி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் ஒவ்வொரு துறைகளையும் பிரதமர் மோடி வலுப்படுத்தி வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்காலங்களின் போது பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். ஆனால், பாஜகவில் அப்படி இல்லை எனவும்,பிரதமரின் அமைச்சரவையில் 20 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்துள்ளனர். 


ஆனால், தமிழகத்தில் அம்பேத்கர் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் இயக்கங்களாக பட்டியலினத்தவருக்கென கூறிக் கொள்ளும் இயக்கங்கள் உள்ளது என்றார்.மேலும் தமிழகத்தில் பட்டியலினத்தவர்கள் ஊராட்சிமன்றத் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் மூலமாக மிரட்டப்படுவதோடு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் மீது தமிழக முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தலைநிமிர்வு ஆட்சி நடப்பதாக முதல்வர் சொல்கிறார், ஆனால், இங்கு தலைகுனிவு ஆட்சி தான் நடக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

*/