கழகத்தின் இரும்புக் கோட்டையாக கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தை மாற்றுவோம் - சொரத்தூர் இரா.இராஜேந்திரன் சூளுரை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

கழகத்தின் இரும்புக் கோட்டையாக கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தை மாற்றுவோம் - சொரத்தூர் இரா.இராஜேந்திரன் சூளுரை


கழகத்தின் இரும்புக் கோட்டையாக கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தை மாற்றுவோம். கழக அமைப்பு செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  சொரத்தூர் இரா.இராஜேந்திரன் சூளுரை.

கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தை கழகத்தின் இரும்புக் கோட்டையாக மாற்றுவோம் என்று நெய்வேலியில் நடந்த கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு.


கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் உட்கட்சி அமைப்பு தேர்தலில் நெய்வேலி நகர நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வெற்றி படிவம் வழங்கும் விழா மற்றும் நெய்வேலி நகரிய  செயல் வீரர்கள் கூட்டம் நெய்வேலி அண்ணா தொழிற்சங்கம் அம்மா அரங்கில் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  சொரத்தூர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட அவைத்தலைவர் என்.முத்துலிங்கம் மாவட்ட பொருளாளர் கே.தேவநாதன்,  நகர அவைத்தலைவர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.பாண்டுரங்கன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் இரா.இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலாளர் கே.கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். உட்கட்சி அமைப்பு தேர்தலில் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வெற்றி படிவத்தை வழங்கி  கழக அமைப்பு செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசியதாவது,


நெய்வேலி நகரியத்தில் 65 ஆயிரம் வாக்குகள் உள்ளதாக வாக்காளர் பட்டியல் சொல்கிறது. ஆனால் உண்மையில் அந்த அளவுக்கு வாக்காளர்கள் இல்லை. வட்டம் தோன்றும் நிர்வாகிகள் குழு அமைத்து உண்மையில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும். ஆட்சியதிகாரத்தில் இன்று நாம் இல்லை. ஆனால் இனி எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஸ்டாலின் தனது திறமையை வைத்து இன்று ஆட்சி கட்டிலில் அமரவில்லை.  நம்மிடையே உள்ள சின்னச்சின்ன வருத்தங்கள் கூட்டணியில் சிக்கல் தொண்டர்களை அரவணைத்துச் இல்லாதது போன்ற காரணங்களால் நாம் ஆட்சியை பறிகொடுத்து இருக்கின்றோம். 


இந்த கூட்டத்தில்  பங்கேற்றுள்ள மாவட்ட நகர கழக நிர்வாகிகள் கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். பொதுமக்களிடமும் நம் ஆட்சியின்  மக்கள் நலத்திட்டங்களை சொல்லி அவர்களை கழகத்தின் பால் பாசம் உள்ளவர்களாக மாற்றவேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் ஊடகங்கள், செய்தித்தாள்களை தன் பக்கம் வைத்துக் கொண்டு உண்மை தகவல்களை மக்களுக்கு தராமல் ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்.  புரட்சித்தலைவி அம்மா, எம்ஜிஆர், எடப்பாடியார்  ஆகியோர் தந்த நல்ல திட்டங்களை எல்லாம் திமுக அரசு கொடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது. பொதுமக்கள் அவர்களிடம் தாலிக்கு தங்கம்,  பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற நல்ல திட்டங்களை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும்.

கழகத்தை நாம் கட்டுக்கோப்பாக வைத்து இருந்தாலே போதும் இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அல்லது எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெறலாம். கடந்த ஓராண்டு விடியல் ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. நாம் கழக ஆட்சியில் நிதிஒதுக்கீடு செய்த  திட்டங்கள் மட்டுமே தற்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றிக் கொண்டு உள்ளார்கள். பொறுப்பில்  உள்ள கழக நிர்வாகிகள் அடித்தட்டு மக்களுக்கும் பாமர மக்களுக்கும் இந்த ஆட்சியின் சீர்கேடுகளை  கொண்டுபோய் சேர்க்க வேண்டும். .நெய்வேலி  நகரத்தில் உள்ள  அனைத்து பொறுப்புகளுக்கும் புதிய பொறுப்பாளர்களை  நியமித்து உள்ளோம்.  பொறுப்பாளர்கள் நெய்வேலி நகரில் உள்ள என்எல்சி தொழிலாளர்களிடம்  நமது ஆட்சியின் நல்ல பல திட்டங்களை எடுத்துக் கூறி அவர்களை கழக உறுப்பினராக  மாற்ற வேண்டும். புதிய பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி தொகுதிகளை கழகத்தின் இரும்புக் கோட்டையாக மாற்றி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி  ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நாம் செயல்பட வேண்டும் என்று பேசினார்.


இந்த கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை ஒரு மனதாக தேர்வு செய்ததற்கும், விடியா  அரசை வீட்டுக்கு அனுப்பி கழக ஆட்சியை மீண்டும் கொண்டுவர கழகத் தோழர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்ற இந்த அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்த கூட்டத்தில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் எல்.எஸ்.ஆர்.கோவிந்தராஜ்,  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பெருமாள்ராஜா, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் இரா. கோவிந்தராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஜி.பாஷ்யம்,  கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம் டி வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/