கடலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சசிகலா நேரில் ஆறுதல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

கடலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சசிகலா நேரில் ஆறுதல்

சிகலா அவர்கள்  இரண்டு பெண் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்திற்கு நேரில் வந்து கண்ணீர் விட்டு ஆறுதல், இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளின் சகோதரரை நான் பார்த்துக்கொள்கிறேன் என இரண்டு பெண் குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தந்தையரிடம் கூறி வி கே சசிகலா அவர்கள் ஆறுதல் கூறினார்.


கடந்த 5-ம் தேதி கடலூர் மாவட்டம் அருங்குணம் எ.குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுமிகள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் கடலூர் மாவட்டத்தையே துயரத்தில் ஆழ்த்தியது இதில் இரண்டு பெண் குழந்தைகள் குறிஞ்சிப்பாடி தாலுக்கா அயன் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராஜகுரு பிரியா இவர்களின் மகள்கள் பிரியதர்ஷினி வயது 15 காவியா வயது 10 ஆகிய இருவரும் அக்கா தங்கை ஆவார். 


இந்த இருவரையும் பறிகொடுத்த தாய் தந்தையரின்  இல்லத்திற்கே வி கே சசிகலா அவர்கள் நேரில் இன்று வந்து கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார். விகே சசிகலாவிடம் கீழே விழுந்து கதறி அழுத போது அவர்களின்  சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் வி கே சசிகலா அவர்கள் கண்ணீர் மல்க உங்களின்  மகனை நான் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லி ஆறுதல் கூறினார்.

No comments:

Post a Comment

*/