வள்ளலார் ஒருங்கிணைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாகபூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

வள்ளலார் ஒருங்கிணைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாகபூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா


வள்ளலார் ஒருங்கிணைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக NJV நகர் பகுதியில் உள்ள பிரதான பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது.

வள்ளலார் ஒருங்கிணைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதி NJV நகரில் உள்ள பிரதான பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். டாக்டர் M.செந்தில்குமார் பொது மேலாளர், சுற்றுச்சூழல் துறை NLCIL அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடபட்டது. 


இந்த விழாவிற்கு சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  வடக்குத்து அன்பு திராவிடன் அவர்கள் மரக்கன்றுகள் கொடுத்து முன்னிலை வகித்து சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர்  அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர்  சடையப்பன், வடக்குத்து (நெய்வேலி) காவல் கண்காணிப்பாளர் சாகுல் ஹமீத், இந்திரா நகர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்  ஆனந்த ஜோதி, வள்ளலார் ஒருங்கிணைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக அதன் தலைவர் திரு. சுப்பிரமணி, துணை தலைவர் ' வசந்தம் ' பிரபாகரன், செயலாளர் திரு. தீனதயாளன், பொது செயலாளர் திரு.குமரன், துணை செயலாளர் தோழர் நெய்வேலி அசோக், பொருளாளர் அரசகுமாரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திருமதி தமிழரசி, NJV நகர் திமுக கிளை செயலாளர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment

*/