கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முற்பகலில் அறிவியல் பிரிவு பட்டதாரிகளுக்கும், பிற்பகலில் கலைப் பிரிவு பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவிற்கு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.  ஜோதி வெங்கடேசுவரன் அவர்கள் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி திருவள்ளுவன் அவர்கள் மாணாக்கர்களுக்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். 


அவர் தனது உரையில், பெரியார் கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவராகிய நான், இன்று இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னைப் போலவே நீங்களும் வழ்வில் பல உச்சங்களை அடைய முடியும். ஆகவே “தன்னம்பிக்கையுடனும் விடமுயற்சியுடன் செயல்பட்டு மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்” என்றார். 


தலைமை உரை நிகழ்த்திய பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.  ஜோதி வெங்கடேசுவரன் அவர்கள் “இக்கல்லூரியில் பயின்ற மாணாக்கர்கள் பலரும் ஆசியர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் ஆளுமைகள், பேராசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், சமூக சேவகர்கள், வேளாண்பெருமக்கள் எனப் பலநிலைகளின் திறம்படச் செயலாற்றி வருகின்றனர். அதனைப் போலவே இன்று பட்டம் பெறுகின்ற நீங்கள் அனைவரும் பல்வேறு சாதனைகளைச் செய்து முன்னேற வேண்டும்” என ஊக்கப்படுத்தினார்.

கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பெரியார் கலைக் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகள் 2062 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.  


நிறைவாக பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி அவர்கள் நன்றி உரை ஆற்றினார். 


பட்டங்கள் பெற்ற மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெரியார் கலைக் கல்லூரியில் அனைத்து துறைத் தலைவர்கள், நூலகர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பட்டம்பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/