கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அண்ணாஈ பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் ஆகியோர் கலந்துகொண்டு திமுக தலைமையிலான அரசின் கொள்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடிரென மேடையில் ஏறி திமுகவினர் பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர் அங்கிருந்து நாம் தமிழர் கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தினர் அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த சேத்தியாத்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்தனர் பின்பு தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே மேற்கண்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியினர் டிஎஸ்பி சுந்தரம் அவர்களிடம் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் செய்துவருகிறார்கள் பொதுக்கூட்ட மேடையில் திமுக பிரமுகர்கள் ஏறி ரகளையில் ஈடுபட்டதால் காட்டுமன்னார்கோவில் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.செய்தியாளர் கே பாலமுருகன்


No comments:
Post a Comment