விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு


கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கி கடந்த 22ஆம் தேதி நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நிறைவு நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் விருத்தாசலம் வட்டாட்சியர் தணபதி வரவேற்புரையாற்றினார்.


இதில்  2147மனுக்கள் பெறப்பட்டு 514 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 1633 மனுக்கள் நடவடிக்கையில் இருப்பதாகவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். 


இலவச வீட்டு மனை பட்டா 150 ஈ. பட்டா 250 முதியோர் உதவித்தொகை. 99, குடும்ப அட்டை  4 பட்டா மாற்றம் 200ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு தையல் இயந்திரம், 3 நபர்களுக்கு சலவை பெட்டியும் ஆக மொத்தம் 1,74,34,560 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வ பாண்டி விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நகர செயலாளர் தண்டபாணி நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், விருத்தாசலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தெற்கு ஒன்றிய செயலாளர் வேலுப்பிள்ளை மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


விருத்தாசலம் தனி வட்டாட்சியர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் செந்தில் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment

*/