கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரிலுள்ள பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலில மூன்று மாதங்களுக்கொரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் மணிமண்டபத்தில் இந்து அறநிலையத் துறை மாவட்ட உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், கோயில் செயல் அலுவலர் பழனியம்மாள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருக்கோயிலுக்குள்ள முனியப்பர் சன்னதி ,உற்சவர் மண்டபம்,விநாயகர் சன்னதி ,மணி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் காசுகளை அலுவலக ஊழியர்கள் ,பக்தர்கள் எண்ணி முடித்ததில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 126 ரூபாய் ரொக்க பணமும் 200 கிராம் வெள்ளி இருந்தது .அவற்றை கோயில் வங்கிக்கணக்கில் செலுத்தினர்.

No comments:
Post a Comment