மருதூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் தூய்மையான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் இவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் முன்னிலை வகித்து கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளைஇணைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கி ஊராட்சி முழுவதும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் பொது இடங்களில் குப்பை கொட்டுதல் தவிர்த்தல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதற்கான ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தினர் இப்பேரணியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment