குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையதிலிருந்து துவங்கிய இந்த பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர்  தலைமை தாங்கினார். 


பேரணியை திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள்   கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பேரூராட்சி ஊழியர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர் .


பேரணியானது பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி குறிஞ்சிப்பாடி பெருமாள் கோவில் வழியாக சென்று பின்னர் குறிஞ்சிப்பாடி  பேரூராட்சி அலூவலகத்தில் நிறைவுற்றது. மேலும் இந்த பேரணியில் மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும்  மஞ்சப்பை வழங்கப்பட்டது. பேரணியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/