குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல். சித‌ம்பர‌ம் நகர பாஜக வெடி வெடித்து, பொது மக்க ளுக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல். சித‌ம்பர‌ம் நகர பாஜக வெடி வெடித்து, பொது மக்க ளுக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல். சித‌ம்பர‌ம் நகர பாஜக  வெடி வெடித்து, பொது மக்க ளுக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். 


ஒடிசா மாநில அரசியல் ம‌ற்று‌ம் ஆட்சி அனுபவம் மிக்க ஒரு பழங்குடி இன பெண்மணி  திருமதி. திரௌபதி முர்மு  அவர்களுக்கு  இந்திய குடியரசு தலைவர் பதவிக்கு  வேட்பாளர் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவ‌ர்க‌ள் வேட்பு மனு தாக்கல் செய்ததை கொண்டாடும் வகையில்  கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணியும் சித‌ம்பர‌ம் நகர் மண்டலில்  பாஜக சித‌ம்பர‌ம் நகர தலைவர் இன்ஜினியர் ஆர்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட மகளிர் அணி தலைவி  சுஜாதா செந்தில் அவர்கள் முன்னிலையில் சித‌ம்பர‌ம் தெற்கு சன்னதி மற்றும் சபாநாயகர் தெருவில் உள்ள நகர பாஜக அலுவலகம் முன்பு  வெடி வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 


மேலும் மாவட்ட தலைவர் கே.ஆர்.மாமல்லன் அவர்கள் தலைமையில் கடவாச்சேரி இருளர் இன மக்கள் வாழும் பகுதிகளில் வெடி வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில் பொது செயலாளர் கோபிநாத்கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், அலுவலக செயலாளர் அரவிந்த், நகர பொது செயலாளர் பாலாஜி தீட்சிதர், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுப.நாகேஸ்வரன்பாபு, நகர துணைத் தலைவர்கள் சின்னிகிருஷ்ணன், மாணிக்கராஜ், குமார், நகர செயலாளர்கள் நாகராஜ், கமலக்கண்ணன், நிர்மலா மகளிர் அணி பொது செயலாளர் நித்யா கொளஞ்சியப்பன், மாவட்ட செயலாளர் கீதா சிவகுமார், நிர்வாகிகள் செந்தில், லதா,  ராஜேஸ்வரி, சித்ரா, கவிதா, ஹெலன் ஸ்டெல்லா, அய்யப்பன் செந்தமிழ்செல்வி ம‌ற்று‌ம் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/