பெட்ரோல் பங்க் அருகே டேங்கர் லாரி பஸ், மற்றும் கார் மீது மோதி விபத்து - போலிசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

பெட்ரோல் பங்க் அருகே டேங்கர் லாரி பஸ், மற்றும் கார் மீது மோதி விபத்து - போலிசார் விசாரணை

பெட்ரோல் பங்க் அருகே டேங்கர் லாரி பஸ், மற்றும் கார் மீது மோதி விபத்து,  போலிசார் விசாரணை  


கடலூர் மாவட்டம்,  விருத்தாசலம்  வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்டபங்குறிச்சி அடுத்த சித்தூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே டேங்கர் லாரி பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கார் மற்றும் தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.


விருத்தாசலத்திலிருந்து டிஎண், 91,கே 4992 என்ற எண்ணுள்ள  தனியார் பேருந்து தொழுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது, கண்டபங்குறிச்சி அருகே  சித்தூர் எல்லையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது அதன் பின்னால் வந்து கொண்டிருந்த  டிஎண், 09, பி எக்ஸ், 9733 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரி திடீரென்று பேருந்தை முந்த செல்க சென்று கொண்டிருந்த போது எதிரில் திருச்சியிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற  டிஎண், 67, பி எப், 0401 என்ற எண்ணுள்ள கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டேங்கர் லாரி  ஓட்டுனர் கார் மீது மோதமல் இருக்க லாரியை இடது புறம் திருப்பிய போது பேருந்து மீது லாரி மோதியது.

அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார்  திடீரென்று குறுக்கே நின்ற லாரியில்  மோதி  விபத்து ஏற்பட்டது, இதில் தனியார்  பேருந்தில் பயணம் செய்த குமாரமங்கலம் சாந்தி ராஜேந்திரன், விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் கருணாகரன், விஎன்ஆர், நகரை சேர்ந்த. நாகராஜ், தொட்டிகுப்பம் பார்வதி அண்ணாதுரை, வேப்பூர் ராஜேஸ்வரி சடையமுத்து உள்ளிட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதில்  சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இந்த விபத்து  குறித்து தகவலறிந்த வேப்பூர் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்

No comments:

Post a Comment

*/